அவசரப்பட்டு வேற மிட்-ரேன்ஜ் போன் வாங்கிடாதீங்க; வருத்தப்படுவீங்க!

  0
  4
  Oppo A52

  ஒப்போ நிறுவனம் சமீபத்தில் அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆன ஒப்போ ஏ52 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இப்போது இந்த ஸ்மார்ட்போன் நாட்டில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இரண்டிலிருந்தும் வாங்குவதற்கு கிடைக்கிறது.

  இது ட்விலைட் பிளாக் மற்றும் ஸ்ட்ரீம் ஒயிட் கலர் விருப்பங்களில் வருகிறது. இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.16,990 ஆகும்.

  சலுகைகளை பொறுத்தவரை பாங்க் ஆப் பரோடா கிரெடிட் கார்டு வழியிலான இ.எம்.ஐ மற்றும் ஃபெடரல் வங்கி டெபிட் கார்டு வழியிலான இ.எம்.ஐ ஆகியவற்றில் வாடிக்கையாளர்கள் 5 சதவீத கேஷ்பேக்கை பெறலாம்.

  மேலும், வாடிக்கையாளர்கள் பஜாஜ் பின்சர்வ், ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க், ஹோம் கிரெடிட், எச்டிபி பைனான்ஸ் சர்வீஸ், எச்டிஎப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றிலிருந்து கவர்ச்சிகரமான இஎம்ஐ விருப்பங்களையும் பெறலாம். கிரெடிட் கார்டு இ.எம்.ஐ மற்றும் டெபிட் கார்டு இ.எம்.ஐ பரிவர்த்தனைகளில் 6 மாதங்கள் வரை நோ காஸ்ட் இ.எம்.ஐ விருப்பாங்கள் கிடைக்கின்றன.

  ஒப்போ A52 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

  – ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 7.1
  – 6.5 இன்ச் (1,080×2,400 பிக்சல்கள்) டிஸ்ப்ளே
  – 90.5 சதவீத ஸ்க்ரீன் டூ பாடி விகிதம்
  – ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 SoC ப்ராசஸர்
  – 8 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம்

  – க்வாட் கேமரா அமைப்பு
  – 12 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி
  – 8 எம்பி செல்பீ கேமரா

  – 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜ்
  – வைஃபை
  – எல்டிஇ
  – ப்ளூடூத்
  – 3.5 மிமீ ஹெட்ஜாக்
  – யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

  – 5,000 எம்ஏஎச் பேட்டரி
  – 18W சார்ஜிங்
  – பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்
  – 162.0×75.5×8.9 மிமீ அளவு
  – 192 கிராம் எடை.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here