கொரோனா இல்லாத மாவட்டமானது பெரம்பலூர்..! இன்றைய முழு விவரம்

0
2
தமிழகத்தில் இன்றைய (14-01-2021) கொரோனா நிலவரத்தை மாவட்ட வாரியாக பாப்போம்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 663 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2 பேர் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,28,952 ஆக அதிகரித்துள்ளது. இது நீங்கலாக இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் மொத்தம் 26 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 20 பேருக்கும் உருமாறிய வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தற்போது 6,488 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 195 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 228566 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 222501 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 4057 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 77 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 53408 ஆக அதிகரித்துள்ளது. 52101 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 662 பேர் பலியாகியுள்ளனர்.

மாவட்ட வாரியாக நிலவரம்

மாவட்டத்தில் இன்று புதிதாக ஒருவருக்குகூட கொரோனா உறுதியாகவில்லை. இதுவரை இங்கு 2259 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2238 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது ஒருவர் கூட இங்கு சிகிச்சையில் இல்லை. அதுபோல குறைந்தபட்சமாக அரியலூரில் இன்று ஒருத்தருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை இங்கு 4660 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் தற்போது 17 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 60,406 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,47,61,304 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 826 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 8,10,218 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 12,246 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here