வெறும் ரூ.21990 முதல்; தரமான 10 பிலிப்ஸ் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்!

  0
  7

  ஹைலைட்ஸ்:

  • புதிய பிலிப்ஸ் ஸ்மார்ட் டிவகள் அறிமுகம்
  • 4 தொடரின் கீழ் 10 மாடல்கள் அறிமுகம்
  • 32 இன்ச் முதல் 70 இன்ச் வரை நீள்கிறது

  டிபிவி டெக்னாலஜி நிறுவனம் அதன் வரம்பின் கீழ் 10 புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த புதிய பிலிப்ஸ் டிவிகள் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பதற்கு அதிக சக்தி வாய்ந்த உட்புற அனுபவத்தை வழங்கும்.

  அறிமுகமாகியுள்ள புதிய 10 பிலிப்ஸ் ஸ்மார்ட் டிவிகளும் 8200 சீரிஸ், 7600 சீரிஸ், 6900 சீரிஸ் மற்றும் 6800 சீரிஸின் கீழ் பிரிக்கப்படுகின்றன.

  இந்த பிலிப்ஸ் டிவிகள் முன்னணி ஆஃப்லைன் சில்லறை சேனல் மற்றும் இணையதளம் வழியாக வாங்க கிடைக்கும். தற்போது நாடு முழுவதும் 35000+ கடைகளில் TPV-யின் பங்களிப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  கூடுதலாக, பிலிப்ஸ் நுகர்வோருக்கு விற்பனைக்குப் பின் சேவையை வழங்க TPV இந்தியா முழுவதும் ஒரு சேவை வலையமைப்பையும் கொண்டுள்ளது.

  8200 சீரிஸின் கீழ் நான்கு புதிய டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவைகள் 70 இன்ச், 65 இன்ச், 55 இன்ச் மற்றும் 50 இன்ச் அளவுகளில் (70PUT8215, 65PUT8215, 55PUT8215, 50PUT8215) வருகின்றன. இவைகளின் விலை முரையே ரூ.149,990, ரூ.119,990, ரூ.89,990 மற்றும் ரூ.79,990 ஆகும்.

  7600 சீரிஸின் கீழ் இரண்டு மாடல்கள் கிடைக்கிறது – 58 இன்ச் மற்றும் 50 இன்ச் அளவுகள் (58PUT7605, 50PUT7605) ஆகும். இதன் விலை முறையே ரூ.89,990 மற்றும் ரூ.69,990 ஆகும்.

  6900 சீரிஸின் கீழ் இரண்டு அளவுகளில் 43 இன்ச் மற்றும் 32 இன்ச் (43PFT6915, 32PHT6915) மாடல்கள் முறையே ரூ.44,990 மற்றும் ரூ.27,990 க்கு அறிமுகமாகி உள்ளன.

  கடைசியாக உள்ள 6800 சீரிஸின் கீழ் இரண்டு திரை அளவுகளில் 43 இன்ச் மற்றும் 32 இன்ச் (43PFT6815, 32PHT6815) மாடல்கள் முறையே ரூ.35,990 க்கும் மற்றும் ரூ.21,990 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

  8200 சீரிஸ் டிவி மாடல்களின் அம்சங்கள்:

  – பிலிப்ஸ் 4 கே யுஎச்.டி எல்இடி ஆண்ட்ராய்டு டிவி
  – டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ்
  – கூகுள் அசிஸ்டென்ட்
  – கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் பிலிப்ஸ் டிவி ஆப் கேலரி அணுகல்
  – அனைத்து வகைகளிலும் பி 5 இன்ஜின்
  – HDR10 + ஆதரவு
  – டிவி ரிமோட் வழியாக வாய்ஸ் கமெண்ட் (கூகுள் அசிஸ்டென்ட்)
  – அலெக்ஸா இயக்கப்பட்ட சாதனங்கள் மூலம் வாய்ஸ் கமெண்டை வழங்கலாம்
  – உள்ளமைக்கப்பட்ட Chromecast அம்சம்
  – சவுண்ட்பார் மற்றும் ஹெட்ஃபோன்களை இணைப்பதற்கான ப்ளூடூத் தொழில்நுட்பம்

  7600 சீரிஸ் டிவி மாடல்களின் அம்சங்கள்:

  – பிலிப்ஸ் 4 கே யுஎச்.டி எல்இடி ஸ்மார்ட் டிவி
  – பி 5 பெர்பெக்ட் பிக்சர் எஞ்சின்
  – HDR10 + டிஸ்ப்ளே ஆதரவு
  – மெலிதான குறைந்தபட்ச பிரேம் வடிவமைப்பு
  – சாஃபி தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது, இது தடையற்ற பயனர் இன்டர்பேஸிற்க்கான “ஒன் பட்டன்” அணுகலை வழங்குகிறது.
  – டால்பி விஷன் & டால்பி அட்மோஸ்
  – சவுண்ட்பார்ஸ் மற்றும் ஹெட்ஃபோன்களை இணைக்க ப்ளூடூத் தொழில்நுட்பம்
  – உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தை உங்கள் டிவி திரையில் பிரதிபலிக்கும் ஸ்க்ரீன் மிராஸ்காஸ்ட் ஆதரவு.

  6900 சீரிஸ் டிவி மாடல்களின் அம்சங்கள்:

  -ஆண்ட்ராய்டு டிவி ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் உள்ளமைக்கப்பட்ட கூகுள் அசிஸ்டென்ட்
  – டால்பி டிஜிட்டல் பிளஸ்
  – பிக்சல் பிளஸ் எச்டி டிஸ்ப்ளே
  – டிவி ரிமோட் மூலம் வாய்ஸ் கமெண்ட்
  – உள்ளமைக்கப்பட்ட Chromecast

  6800 சீரிஸ் டிவி மாடல்களின் அம்சங்கள்:

  – 43 மற்றும் 32 அங்குல மாறுபாட்டைக் கொண்ட பிலிப்ஸ் 6800 டிவி சீரிஸ் முறையே புல் எச்டி மற்றும் எச்டி எல்இடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது
  – சாஃபி தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது, இது தடையற்ற பயனர் இன்டர்பேஸிற்க்கான “ஒன் பட்டன்” அணுகலை வழங்குகிறது.
  – HDMI வழியாக 20 எம்எஸ் க்கும் குறைவான இன்புட் லேக்கை கொண்டிருப்பதால் இது ஒரு சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குகிறது.
  – உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தை உங்கள் டிவி திரையில் பிரதிபலிக்கும் ஸ்க்ரீன் மிராஸ்காஸ்ட் ஆதரவு.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here