இன்று போக்கோ M2 ப்ரோ விற்பனை: ரூ.13,999 க்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்?

  1
  2

  சமீபத்தில் போக்கோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் “பட்ஜெட்” ஸ்மார்ட்போனாக போக்கோ M2 ப்ரோ மாடல் இந்தியாவில் அறிமுகமானது.

  போக்கோ எம் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.13,999 என்றும், இதன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.14,999 என்றும் மற்றும் டாப்-ஆஃப்-லைன் மாடலான 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது ரூ.16,999 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது – அவுட் ஆஃப் தி ப்ளூ, க்ரீன் மற்றும் க்ரீனர், மற்றும் டூ ஷேட்ஸ் ஆஃப் பிளாக். மேலும், இது பிளிப்கார்ட் மூலம் இன்று, அதாவது ஆகஸ்ட் 25 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு (நண்பகல்) பிளாஷ் விற்பனைக்கு செல்கிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்க ஆர்வமாக உள்ளவர்கள் தயாராக இருக்கவும்.

  விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, ஆக்சிஸ் வங்கி பஸ் கார்டில் ஐந்து சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும் மற்றும் பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டில் ஐந்து சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும் மற்றும் ரூ. 1,556 என்கிற விலை நிர்ணயத்தில் தொடங்கி நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களும் அணுக கிடைக்கும்.

  இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன் ஹோல் பஞ்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது மற்றும் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ப்ரோ கலர் மோட், ப்ரோ வீடியோ மோட் மற்றும் ரா மோட் உள்ளிட்ட சில அட்டகாசமான கேமரா பயன்முறைகளுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் போக்கோ நிறுவனத்தின் மூன்றாவது ஸ்மார்ட்போனாகும் .

  புதிய போக்கோ M2 ப்ரோ மூன்று வெவ்வேறு இன்டர்னல் ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது, இது 128 ஜிபி வரை உள் சேமிப்பை நீட்டிக்கிறது மற்றும் 6 ஜிபி ரேம் வரை செல்கிறது. ஒட்டுமொத்தமாக, போக்கோ எம் 2 ப்ரோ மாடலானது இந்த ஆண்டு மார்ச் மாதம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி நோட் 9 ப்ரோவின் சற்றே மாற்றப்பட்ட பதிப்பைப் போல் தெரிகிறது.

  டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட புதிய போக்கோ எம் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது
  ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்-ஐ அடிப்படையிலான போக்கோவிற்கான எம்ஐயுஐ 11 மூலம் இயங்குகிறது.

  இது 20: 9 என்கிற திரை விகிதம் மற்றும் 1,080×2,400 பிக்சல்கள் அளவிலான திரை தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்ட .67 அங்குல முழு எச்டி + டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

  இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி SoC கொண்டு இயங்குகிறது, அதோடு 6 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உள்ளது.

  போக்கோ எம் 2 ப்ரோவின் குவாட் ரியர் கேமரா அமைப்பில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் கொண்ட 8 மெகாபிக்சல் செகண்டரி சென்சார், 5 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவைகள் அடங்கும். முன்பக்கத்தை பொறுத்தவரை, நைட் மோட் அம்சத்தினை ஆதரிக்கும் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

  போகோ எம் 2 ப்ரோவில் 128 ஜிபி வரை யுஎஃப்எஸ் 2.1 உள் சேமிப்பிடம் உள்ளது மற்றும் இது இதன் உள்ளமைக்கப்பட்ட சேமிப்பிடமானது மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக 512 ஜிபி வரை நீட்டிக்க உதவும் ஒரு பிரத்யேக ஸ்லாட்டும் கொண்டுள்ளது.

  இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, இது 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது.

  போர்டில் உள்ள சென்சார்களை பொறுத்தவரை, ஆக்ஸலரோமீட்டர், ஆம்பியன்ட் லைட் செஸ்னார், கைரோஸ்கோப், மேக்னட்டோமீட்டர் மற்றும் ப்ராக்சிமிட்டி சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் உள்ளது.

  போக்கோ எம் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஒரு பெரிய 5,020 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது மற்றும் இது 33W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது (இணக்கமான சார்ஜர் பாக்ஸில் கிடைக்கிறது). தவிர, இந்த ஸ்மார்ட்போன் தூசி மற்றும் ஸ்பிளாஸ்-எதிர்ப்பு அனுபவத்திற்காக P2i நானோ-பூச்சுடன் வருகிறது.

  1 COMMENT

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here