வில்லனாக அவதாரம் எடுக்கும் பிரபல இசையமைப்பாளர்

0
5
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாசிகா ஆனந்த்.. விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான , சினிமா வாய்ப்புகள் எதுவும் அமையாமல் சில திரைப்படங்களில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டு வந்தார்.

அதில் சரியாக கல்லா கட்ட முடியாததால் தனக்கு நெருக்கமான சினிமா வட்டாரங்களுக்கு, அவ்வப்போது வாய்ப்புகள் கேட்டு தூது அனுப்பி வந்தார். அதுவும் ஓர்க்அவுட் ஆகாததால் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்தார்.. ரசிகர்களும் ‘ஆஹா ஓஹோ’ என்று புகழ, தயாரிப்பாளர்களின் கவனம் யாஷிகா பக்கம் திரும்பியது.

அதன் பயனாக தம்பி வெட்டோத்தி சுந்தரம், சவுகார்பேட்டை போன்ற திரைப்படங்களின் இயக்குநர் வடிவுடையான் இயக்கத்தில் உருவாகும் ‘பாம்பாட்டம்’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் யாஷிகா… அதை தொடர்ந்து தற்போது இயக்குநர் புவனின் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்…
சல்ஃபர்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் மூலம் கவர்ச்சியிலிருந்து காக்கி உடைக்கு மாற இருக்கிறார் யாஷிகா.. சப் இன்ஸ்பெக்டாக அவர் நடிக்கவிருக்கும் இந்த புதிய படத்தில், வில்லனாக நடிக்க இருக்கிறார் இசையமைப்பாளர் .

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படங்களில் காமெடியனாக நடித்த சித்தார்த் விபின், இந்த படத்தின் மூலம் வில்லனாக ப்ரோமோட் ஆக உள்ளார்… அவருக்கு, ‘காமெடி கை கொடுத்த அளவிற்கு , வில்லத்தனம் கை கொடுக்குமா’..? என்பது படம் வெளியான பின்னரே தெரியவரும்.

இந்த படம் பற்றி இயக்குனர் புவன் கூறும் போது போது ’சித்தார்த் விபின் அவர்களைப் பார்த்தவுடனே அவர்தான் இந்த படத்தின் வில்லன் என்பதை நான் முடிவு செய்து விட்டேன்’, மேலும் யாஷிகாவை இதுவரை கிளாமராக மட்டுமே பார்த்த ரசிகர்கள் வித்தியாசமான பொறுப்புள்ள ஒரு காவல்துறை அதிகாரியாக ‘சல்ஃபர்’ திரைப்படத்தில் பார்ப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று முதல் பூஜையுடன் தொடங்க இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக 50 நாட்கள் சென்னை உள்பட பல பகுதிகளில் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here