ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல்: #அரசியலுக்கு_வாங்க_ரஜினி

0
5

ஹைலைட்ஸ்:

  • ரஜினியை அரசியலுக்கு வரச் சொல்லி ரசிகர்கள் அறப்போராட்டம்
  • ட்விட்டரில் டிரெண்டாகும் #அரசியலுக்கு_வாங்க_ரஜினி

ஜனவரி மாதம் கட்சி துவங்குகிறேன், டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு வெளியிடுகிறேன் என்று ரஜினி கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டார். அறிவிப்பு வெளியிடட் கையோடு அவர் கட்சி துவங்கும் பணியில் ஈடுபட்டதால் இம்முறை நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் நம்பினார்கள்.

இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றார் ரஜினி. அங்கு அவருக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியதாகிவிட்டது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன கையோடு ரஜினி சென்னை திரும்பினார்.

அவர் ஒரு வாரம் முழு ஓய்வில் இருக்க வேண்டும், ஸ்ட்ரெஸ் கூடவே கூடாது என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கினார்கள். இந்நிலையில், தான் கட்சி துவங்கவில்லை என்று கடந்த மாதம் 29ம் தேதி தெரிவித்தார் ரஜினி. தன் உடல்நலனால் அரசியலுக்கு வரவில்லை என்று ரஜினி அறிக்கை வெளியிட்டார்.

அதை பார்த்து அவரின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறி அவர் வீட்டின் முன்பு சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ரஜினியை அரசியலுக்கு அழைத்து ரசிகர்கள் இன்று சென்னையில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நடந்து வரும் நேரத்தில் #அரசியலுக்கு_வாங்க_ரஜினி என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிற நடிகர்களின் ரசிகர்களும் அந்த ஹேஷ்டேகுடன் ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

#அரசியலுக்கு_வாங்க_ரஜினி என்கிற ஹேஷ்டேகுடன் ரசிகர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
அரசியலுக்கு வாங்க தலைவா. உங்களால் மட்டும் தான் இந்த மாநிலத்தை மாற்ற முடியும். ஆதரவளிக்க நாங்கள் இருக்கிறோம். அறப்போராட்டம் வேண்டாம் என்று நீங்கள் ட்வீட் போடாததே எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது.

ஆதாயம் தேடவோ, பணம் சம்பாதிக்கவோ நாங்கள் உங்களை அரசியலுக்கு அழைக்கவில்லை. நீங்கள் மக்களை வழிநடத்த வேண்டும் என்று மட்டுமே விரும்புகிறோம். தமிழகத்தின் நல் எதிர்காலத்திற்காக அழைக்கிறோம். இது அன்பால் சேர்ந்த கூட்டம், எப்பொழுதும் உங்களுடன் தான் இருக்கும். நம்பி வாங்க தலைவா, நாங்க இருக்கோம் என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here