சாம்சங் கேலக்ஸி A21s ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மாடல் மீது விலைக்குறைப்பு!

    0
    8

    சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி வேரியண்ட் ஆனது இந்தியாவில் ரூ.500 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இதன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி வேரியண்டிலும் ரூ.1,000 என்கிற விலைக்குறைப்பு கிடைத்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

    சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனை இரண்டு மெமரி விருப்பங்களின் கீழ் அறிமுகம் செய்தது. அது 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஆகும். இது முறையே ரூ.16,499 மற்றும் ரூ.18,499 க்கு வாங்க கிடைத்தது. ஆனால் இப்போது விலை குறைப்புக்குப் பிறகு, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ.15,999 என்றும், 6 ஜிபி ரேம் + 64 ஜிபி வேரியண்டின் விலை தற்போது ரூ.17,499 என்றும் மாறியுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் சில்லறை கடைகள், சாம்சங் ஓபரா ஹவுஸ், சாம்சங்.காம் மற்றும் முன்னணி ஆன்லைன் போர்ட்டல்களில் வாங்க கிடைக்கிறது. இது கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது. இந்த விலைக் குறைப்பை முதலில் மும்பையைச் சேர்ந்த சில்லறை விற்பனையாளர் ஆன மகேஷ் டெலிகாம் ட்விட்டரிர் வழியாக அறிவித்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

    சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

    அம்சங்களை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஆனது 720 × 1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.5 இன்ச் எச்டி + இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2GHz ஆக்டா கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

    இது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என்கிற மூன்று மெமரி வகைகளில் வருகிறது. தவிர பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 512 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவையும் கொண்டுள்ளது.

    கேமராத்துறையை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஆனது, 48 மெகாபிக்சல் (எஃப் / 2.0) அளவிலான முதன்மை சென்சார் கொண்ட குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

    அதில் 8 மெகாபிக்சல் (எஃப் / 2.2) அல்ட்ரா-வைட் சென்சார் +2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவைகளும் உள்ளன. முன்பக்கத்தை பொறுத்தவரை, டிஸ்பிளேவின் மேல் இடது மூலையில் அமைந்துள்ள ஹோல்-பஞ்சில் 13 மெகாபிக்சல் (எஃப் / 2.2) செல்பீ கேமரா உள்ளது.

    இந்த லேட்டஸ்ட் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஆனது ஒரு 5,000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது, இது 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. மென்பொருள் துறையை பொறுத்தவரை இது ஆண்ட்ராய்டு 10-அடிப்படையிலான ஒன் யுஐ 2.0 கொண்டு இயங்குகிறது.

    கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் பின்புற பேனலில் கைரேகை ஸ்கேனர் உள்ளது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை 4ஜி VoLTE, டூயல் சிம், வைஃபை, ப்ளூடூத் 5.0, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஹெட்ஜாக் மற்றும் க்ளோனாஸுடன் ஏ-ஜிபிஎஸ் போன்றவைகளை கொண்டுள்ளது. அளவீட்டில் இது 163.7 x 75.3 x 8.9 மிமீ மற்றும் 192 கிராம் எடையை கொண்டுள்ளது.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here