எல்லா புகழும் ‘தோனி’க்கே… காமெடியன் சதீஷ் பல்பு வாங்கிய வீடியோ

0
6
காமெடி நடிகர் சதிஷ் எப்போதும் சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருக்கிறார். குறிப்பாக கொரோனா லாக் டவுன் காலகட்டத்தில் ஷூட்டிங் எதுவும் நடைபெறவில்லை என்பதால் அவர் தன்னுடைய வீட்டில் இருக்கும்போது செய்யும் காமெடியான பல விஷயங்கள் பற்றி பதிவிட்டு வருகிறார்.

மேலும் அது மட்டுமின்றி அவர் பழைய வீடியோக்கள் பலவற்றையும் தற்போது ரசிகர்களுக்காக பதிவிட்டு வருகிறார். குறிப்பாக தமிழ்படம் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் பல விதமான வில்லன் கெட்டப்களை போடும்போது எடுத்த சில வீடியோக்களை அவர் வெளியிட்டு இருந்தது நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் கிரிக்கெட் வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் அவருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதால் பலரும் சமூக வலைத்தளங்களில் மிக நெகிழ்ச்சியாக பதிவிடுவதை பார்க்க முடிகிறது. அந்த வரிசையில் சதிஷ் தற்போது தோனி பற்றி ஒரு வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

சென்ற வருடம் போட்டி நடக்கும்போது எடுத்த வீடியோ தான் அது. அப்போது மற்றும் சதிஷ் தான் ஒன்றாக போட்டியை பார்க்க சென்று இருக்கிறார்கள். மொத்த அரங்கமும் அதிரும் அளவுக்கு ரசிகர்கள் கத்திக்கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களை எல்லாம் பார்த்து கையசைத்து கொண்டு இருக்கிறார். அவருக்கா இப்படி ஒரு ரெஸ்பான்ஸ் என நாம் யோசிக்கும் போது, அந்த வீடியோவை எடுத்துக் கொண்டிருக்கும் ஜீவா “ஹலோ.. அது தோனிக்கு” என சொல்கிறார். அதன் பின் தோனி பேட் உடன் செல்வதையும், அப்போது ‘தோனி’ என இவர்கள் கத்த, அவர் திரும்பி பார்த்துவிட்டு செல்கிறார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. கமெண்டுகளிலும் சதீஷை ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

“செம்ம பல்பா சதீஷ் அண்ணா” என ஒரு ரசிகர் கிண்டல் செய்து உள்ளார்.

“உங்களுக்கு னு நெனச்சிடீங்களா அண்ணா.. ரொம்ப அசிங்கமா போச்சு குமாரு” என மற்றொருவர் கலாய்த்து உள்ளார்.

சதீஷ் அடுத்து கைவசம் பல தமிழ் படங்களை வைத்து இருக்கிறார். குறிப்பாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் அவர் காமெடியனாக நடித்து வருகிறார். மேலும் ஹர்பஜன் சிங், லொஸ்லியா உடன் பிரெண்ட்ஷிப் படத்திலும் ஒரு முக்கிய ரோலில் சதீஷ் நடித்து உள்ளார்.

தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிறகு தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் அவரை பற்றி ட்விட்டரில் மிகவும் நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் உடன் ஓய்வை அறிவித்த ரெய்னா பற்றியும் பலர் பதிவிட்டு இருந்தார்கள்.

நடிகர் சூர்யா பதிவிட்டு இருந்த ட்விட்டில் “ஒரு உண்மையான சாதனையாளர் யார் என்றால் கெரியரில் வெற்றி, மகிழ்ச்சியான குடும்பம் மற்றும் சமுதாயத்திற்கு நல்லது செய்வது தான், இவற்றால் தான் என் ஹீரோ தோனி மற்றும் என் நெருக்கமான நண்பர் ரெய்னா ஆகியோர் சாதனையாளர்கள். இரண்டாவது இன்னிங்ஸிலும் உங்களுக்கு சிறப்பான விஷயங்கள் காத்திருக்கிறது. இந்த நாட்டையே inspire செய்ததற்கு ஒரு சல்யூட்” என கூறி இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here