தம்பி அஜித்தை பாராட்டிய சீமான்: அண்ணன் குசும்புக்காரர் ஓட்டுக்கு அடிபோடுறார்

0
10

ஹைலைட்ஸ்:

  • 6 மெடல் ஜெயித்த அஜித்தை பாராட்டிய சீமான்
  • பாராட்டு ட்வீட்டுக்காக சீமானை கலாய்க்கும் நெட்டிசன்கள்
  • துப்பாக்கிச்சுடும் போட்டியில் பதக்கம் வென்ற அஜித்

ஷூட்டிங் இல்லாததால் அடிக்கடி சென்னையில் இருக்கும் ரைஃபிள் கிளப்புக்கு சென்று வருகிறார். அவர் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில் சென்னையில் நடந்த 46வது மாநில துப்பாக்கிச்சுடும் போட்டியில் அஜித் கலந்து கொண்டார். சென்னை ரைஃபிள் கிளப் சார்பில் கலந்து கொண்டார் அஜித். அவரின் அணி 4 தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றது. பரிசளிப்பு விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
பதக்கங்கள் வென்ற அஜித்துக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அஜித்தை வாழ்த்தி ட்வீட் போட்டுள்ளார்.

அந்த ட்வீட்டில் சீமான் கூறியிருப்பதாவது,
சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநிலத் துப்பாக்கி சுடுதல் முதல்நிலைப் போட்டியில் ‘சென்னை ரைஃபிள் கிளப்’ அணிக்காக தம்பி அஜித்குமார் அவர்கள் பங்கேற்று 6 பதக்கங்களை வென்ற செய்தியறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

தம்பி அஜீத் திரைப்பட நடிகராக மட்டுமின்றி, துப்பாக்கி சுடுதல் , இரண்டு, நான்கு சக்கர வாகனப் பந்தயங்களில் பங்கெடுத்தல், நவீன எந்திரப் பொறிகளை உருவாக்குதல் உள்ளிட்டப் பன்முகத்திறமைகளைக் கொண்டவராக விளங்குவது பாராட்டுக்குரியது.

இன்றைய இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் தனது தனித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கேற்பத் திகழும் தம்பி அஜீத் அவர்கள் தொடர்ந்து மேலும் பல சாதனைகளைப் புரிய எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்! என்றார்.

அந்த ட்வீட்டை பார்த்த அஜித் ரசிகர்கள் சீமானுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது, என்ன அண்ணே, தேர்தல் வருவதால் அஜித் ரசிகர்களின் வாக்குகளை பெற தலயை பாராட்டுகிறீர்களா?. அண்ணன் குசும்புக்காரர் ஓட்டுக்கு அடிபோடுறார்.

நீங்கள் என்ன தான் பாராட்டினாலும் உங்களுக்கு அஜித்தின் கால்ஷீட் கிடைக்காது என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here