படத்தின் பிஜிஎம் மற்றும் ட்ரெய்லரில் எஸ்.ஜே.சூர்யாவின் வெறித்தனமான நடிப்பும் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. 2017ம் ஆண்டே வெளியாகி இருக்க வேண்டிய இந்தப்படம் நிதி நெருக்கடி காரணமாக தள்ளிப்போய் கொண்டே இருந்தது. 2019ஆம் ஆண்டு “நெஞ்சம் மறப்பதில்லை” படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி, அதில் விரைவில் என்ற வார்த்தையை வெளியிட்டிருந்தது படக்குழு.
இதனால் படம் ரிலீஸ்க்கு தயாராக இருக்கிறது என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதன் பிறகும் படம் வெளியாகவில்லை. பின்னர் சூர்யாவை வைத்து செல்வராகவன் எடுத்த “என்.ஜி.கே.” படம் வெளியாகி தோல்வியைச் சந்தித்தது. இந்தப் படத்தில் , ரகுல் ப்ரீத் சிங் என இரண்டு ஹீரோயின்கள் நடித்திருக்கிறார்கள். படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தனர்.

இந்நிலையில் “புதுப்போட்டை 2”, “இரண்டாம் உலகம்-2”, “ஆயிரத்தில் ஒருவன் 2” என அடுத்தடுத்து செல்வராகவன் பிரம்மாண்ட பிளான் வைத்திருக்கிறார். இதையடுத்து நெஞ்சம் மறப்பதில்லை எப்போது வெளியாகும் என்று பலரும் செல்வராகவனிடம் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் பல மாதங்கள், வருடங்கள் கடந்து நெஞ்சம் மறப்பதில்லை குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓடிடியில் வெளியாகவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக சினிமா நோக்கர்கள் பலரும் தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.