டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் பற்றிய கட்டுக்கதைகளும் உண்மைகளும்… ஆண்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கணும்…

0
13

சமூகத்தில் டெஸ்டோஸ்டிரோன் குறித்த தவறான பார்வை உள்ளது. டெஸ்டோஸ்டிரோனானது உடல் கட்டமைப்பு, வலிமை, வீரியம், சிக்ஸ் பேக் ஆகியவற்றை இணைக்கும் புள்ளியாக உள்ளது. ஆனால் வழக்கமாக இதை பற்றி பலர் தவறான கண்ணோட்டத்தை கொண்டுள்ளனர். எனவே இது குறித்த உண்மையை இப்போது பார்ப்போம்.

​ஹார்மோன் பற்றிய உண்மை

முதலில் டெஸ்டோஸ்டிரோன் பற்றி நாம் சிறிது தெர்ந்துக்கொள்ள வேண்டும். இது ஆண்களின் முக்கியமான பாலுறவு ஹார்மோனாக உள்ளது. எனவே இவை உயிரை உருவாக்கும் சக்தி வாய்ந்த ஹார்மோனாக பார்க்கப்படுகிறது. ஒரு ஆணில் வாழ்க்கையில் கருவாக இருக்கும்போதே உடலில் டெஸ்டோஸ்டிரோன் கூர்முனை ஏற்படுகிறது. அதன் பிறகு பிறந்து பல ஆண்டுகள் கழித்து பதின் பருவத்தில் இதன் உற்பத்தி அதிகரிக்கிறது. அதுவரை சிறுவர்களாக இருந்தவர்களை அது ஆண்களாக மாற்றுகிறது.

சொல்லப்போனால் ஆண்கள் வயதுக்கு வரும் நிகழ்வை உடல் ரீதியாக டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் ஏற்படுத்துகிறது. இதன் அதிகரிப்பின் காரணமாக ஆண்களுக்கு அந்தரங்க பாகங்களில் முடி, முகங்களில் முடி, ஆழமான குரல்கள், உடலில் பெரிய தசைகள், பரந்த மார்பக வளர்ச்சி ஆகியவை ஏற்படுகின்றன. இப்போது இந்த ஹார்மோனின் முக்கியத்துவம் உங்களுக்கு புரிந்திருக்கும். சுருக்கமாக சொல்வதானால் இது ஆதாமின் ஆப்பிள் என அழைக்கப்படுகிறது.

வளர்ந்த பிறகு பாலியல் ஆசைக்கும், ஆண்குறி விறைப்புத்தன்மை மற்றும் விந்து உற்பத்திக்கு டெஸ்டோஸ்டிரோன் முக்கியமான ஹார்மோனாக உள்ளது. மேலும் இரத்த எண்ணிக்கையை பராமரித்தல், எலும்பு வலிமை, தசை போன்ற பாலியலுடன் சம்பந்தப்படாத பிற உடல் செயல்பாடுகளிலும் இது பங்காற்றுகிறது.

​கட்டுக்கதைகள்

டெஸ்டோஸ்டிரோன் முக்கியமானது என்பது இப்போது நமக்கு புரிந்தது. இப்போது அதை குறித்த கட்டுக்கதைகளை பார்க்கலாம். இதில் பொதுவான கட்டுக்கதை என்னவென்றால் டெஸ்டோஸ்டிரோன் ஒரு மனிதனின் கட்டுப்பாட்டை இழக்க வைக்கும். ஆனால் உண்மை என்னவென்று ஆண்கள் அறிந்துக்கொள்ள வேண்டும். உண்மை இதற்கு மாறாக உள்ளன.

டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சையானது டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு செய்யப்படும் சிகிச்சையாகும். இந்த சிகிச்சை பெற்றவர்கள் அதிகப்பட்சம் எதிர்மறை உணர்வுகள் மற்றும் மனசோர்வு குறைந்து காணப்படுகின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன.

அதே போல அதிக டெஸ்டோஸ்டிரோன் ஆண்களுக்கு வழுக்கை மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயை ஏற்படுத்துவதாக சில கட்டுக்கதைகள் உண்டு. அவையும் சுத்தமான பொய்கள் ஆகும்.

வழுக்கை என்பது விறைப்புத்தன்மை வீரியத்தை குறிப்பது அல்ல. மேலும் அதற்கும் டெஸ்டோஸ்டிரோனுக்கும் இடையே எந்த தொடர்பும் கிடையாது. மாறாக தலைமுறையில் தாய் வழியில் உள்ள ஆண்களை பொறுத்து ஏற்படும் பரம்பரை குறைபாடாகவே வழுக்கை உள்ளது.

அடுத்து புரோஸ்டேட் புற்றுநோய் குறித்து பார்த்தோமானால் இதற்கும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனுக்கும் பெரிய அளவில் தொடர்பு இல்லை என்றாலும் சிறிய அளவில் தொடர்பு உண்டு. ஆண்களின் முடி, வியர்வை மற்றும் மணம் போன்றவற்றிற்கு டெஸ்டோஸ்டிரோன் காரணமாக உள்ளது என்றாலும் இது மனித ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது என்பதே உண்மை.

​கேடு விளைவிக்கும் அனபோலிக் ஸ்ட்டீராய்டுகள்

உண்மையில் டெஸ்டோஸ்டிரோன் ஆபத்தானது அல்ல. அது சட்ட விரோதமானதும் அல்ல. உண்மையில் இது முற்றிலும் உடலுக்கு ஆரோக்கியமானது ஆகும். ஆனால் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க ஒரு துணை பொருளை நீங்கள் நாடும் போது அவை உங்களுக்கு கேடு விளைவிக்கலாம்.

அனபோலிக் ஸ்ட்ராய்டுகள் டெஸ்டோஸ்டிரோன் அளவை செயற்கையாக அதிகரிக்க உதவுகின்றன. அனபோலிக் ஸ்டெராய்டுகள் பல பெயர்களில் உள்ளன. அர்னால்ட்ஸ், ஜிம் கேண்டி, பம்பர்ஸ், ராய்ட்ஸ், ஸ்டாக்கர்ஸ், வெயிட் ட்ரெயினர்ச் மற்றும் ஜூஸ் ஆகியவை அனபோலிக் ஸ்ட்ராய்டுகளின் சில பெயர்கள் ஆகும்.

இன்னும் 100 வெவ்வேறு அனபோலிக் ஸ்ட்ராய்டுகள் தற்சமயம் உபயோகத்தில் உள்ளன. மேலும் நீங்கள் ஸ்ட்ராய்டுகள் என கூகுளில் தேடினால் அதன் மூலம் மில்லியன் கணக்கான ஸ்ட்ராய்டுகளை காண முடியும். ஆனால் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க நீங்கள் அனபோலிக் ஸ்ட்ராய்டுகளை எடுக்கும்போது அவை சில மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

இதனால் உங்கள் விந்தணுக்களின் அளவு வீழ்ச்சியடையலாம். மார்பகங்கள் மென்மையாகும். மேலும் உங்களுக்கு முகப்பரு ஏற்படும். மேலும் கூடுதலான டெஸ்டோஸ்டிரோன் காரணமாக தடிமனான இரத்தம், ஆபத்தான ரத்த உறைவு மற்றும் பக்கவாதம் ஆகியவை ஏற்பட வாய்ப்புண்டு.

அதிக அளவில் ஸ்ட்டீராய்டு எடுத்துக் கொள்வதால் கொலஸ்ட்ராம் சமநிலை, கல்லீரல் மற்றும் இதய ஆரோக்கியம், இரத்த அழுத்தம் மற்றும் மனநிலை ஆகியவற்றில் பிரச்சனை ஏற்படுகிறது. எனவே டெஸ்டோஸ்டிரோன் குறித்த தவறான கட்டுகதைகளை நம்புவதை விடுங்கள். ஸ்ட்ராய்டுகளை எடுத்துக்கொள்வதாக இருந்தால் இது குறித்து மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here