தியேட்டர்கள் போர்க்கொடி: ஓடிடி ரிலீஸை நிறுத்திய ஈஸ்வரன் படக்குழு

0
5

ஹைலைட்ஸ்:

  • ஈஸ்வரன் ஓடிடி ரிலீஸ் நிறுத்தி வைப்பு
  • ஈஸ்வரன் பட ரிலீஸ் பிரச்சனை தீர்ந்தது

இயக்கத்தில் நடித்துள்ள படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக நாளை மறுநாள் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. முதல்நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் டிக்கெட் வாங்கி வைத்துள்ளனர்.

இந்நிலையில் ஈஸ்வரன் படம் தமிழகத்தில் தியேட்டர்களில் வெளியாகும் அதே நாள் வெளிநாடுகளில் ஓடிடியில் வெளியாகும் என்று நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் முன்கூட்டியே புக்கிங் செய்பவர்களுக்கு 30 சதவீத சலுகை உண்டு என்று அந்த ஓடிடி நிறுவனம் விளம்பரம் செய்தது.

ஈஸ்வரன் படம் ஒரே நாளில் தியேட்டர்களிலும், ஓடிடியிலும் வெளியாவதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஈஸ்வரன் படத்தை திரையிட முடியாது என்று திட்டவட்டமாக கூறினார்கள். இதனால் நாளை மறுநாள் ஈஸ்வரன் ரிலீஸாகுமா, ஆகாதா என்கிற குழப்பம் ஏற்பட்டது.

தியேட்டர் உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியதை அடுத்து ஈஸ்வரன் பட தயாரிப்பு தரப்பு மனம் மாறியுள்ளது. இது குறித்து தயாரிப்பு தரப்பு கூறியிருப்பதாவது,

தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, ஈஸ்வரன் படத்தை ஓடிடியில் வெளியிடும் முடிவை நிறுத்தி வைத்துள்ளோம். தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் எங்களுக்கு கூடுதல் ஸ்க்ரீன்கள் கொடுத்து ஆதரவு அளிக்கும் என நம்புகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா வைரஸ் பிரச்சனையால் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு தான் அனுமதி உள்ளது. இந்நிலையில் ஈஸ்வரன் ஓடிடியில் வெளியானால் பிரச்சனையாகிவிடும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்தே ஈஸ்வரன் படக்குழு தங்கள் முடிவை மாற்றிக் கொண்டுள்ளது.

உடல் எடையை வெகுவாக குறைத்த பிறகு சிம்பு நடித்துள்ள முதல் படம் ஈஸ்வரன். ஒரே மாதத்தில் வேறு நடித்து முடித்தார். அதனாலேயே படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here