பொங்கல் வின்னர், பிளாக்பஸ்டர், மாஸ் கம்பேக்: ஈஸ்வரன் ட்விட்டர் விமர்சனம்

0
5

ஹைலைட்ஸ்:

  • பொங்கல் வின்னர் ஈஸ்வரன்
  • ஈஸ்வரன் படம் கண்டிப்பாக பிளாக்பஸ்டர்

குண்டாக இருந்த தன் உடல் எடையை 30 கிலோ குறைத்து ஒல்லியான கையோடு இயக்கத்தில் நடித்த படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக இன்று ரிலீஸாகியுள்ளது. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். நந்திதா ஸ்வேதா, பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஈஸ்வரன் படம் தியேட்டர்களில் வெளியாவதில் சிக்கலாக இருந்தது. அந்த சிக்கல் எல்லாம் தீர்ந்து ஒரு வழியாக இன்று ரிலீஸாகியுள்ள படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர். சிம்புவின் நண்பன் மகத் ராகவேந்திரா, தங்கை இலக்கியா, நிதி அகர்வால், மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் ரசிகர்களுடன் சேர்ந்து ஈஸ்லவரன் படத்தை பார்த்துள்ளனர்.
ஈஸ்வரனை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கூறியிருப்பதாவது,
சிம்புவின் நடிப்பை பார்த்து மெர்சலாகிவிட்டோம். படத்தை அவர் தான் தன் தோளில் தாங்குகிறார். கடைசி 30 நிமிடங்கள் தீயாக இருந்தது.

சிம்புவின் அபார நடிப்பை பார்த்து கண்ணீர் வந்துவிட்டது. ஈஸ்வரன் படத்தில் தல ரெஃபரன்ஸ் இருந்ததில் மகிழ்ச்சி.
முதல் பாதி போனதே தெரியவில்லை. வேகமாக சென்றுவிட்டது. தலைவன் செமயா இருக்காரு.
அட்லான்டாவில் ஈஸ்வரன் பார்த்தேன். அமெரிக்காவில் சிம்புவுக்கு பயங்கர கிரேஸ். சிம்புவுக்கு ஏற்ற கம்பேக் படம். குடும்பக் கதையை எப்படி படமாக்க வேண்டும் என்பது சுசீந்திரனுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. சிம்பு, பாரதிராஜா சேர்ந்து வரும் காட்சிகள் அருமை. குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க வேண்டிய படம். கண்டிப்பாக பிளாக்பஸ்டர் தான்.

வந்துட்டான் தலைவன் தீயா திரும்பி வந்துட்டான். இரண்டாம் பாதியில் கொஞ்சம் இழுப்பது போன்று இருந்தாலும் படம் நன்றாக இருக்கிறது. ஓவர் ரியாக்ஷன் தான் படத்தின் மைன்ஸ்.

பொங்கலுக்கு ஏற்ற ட்ரீட் ஈஸ்வரன் என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here