26ம் தேதி சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸாகாது

0
14
தமிழக சட்டசபை தேர்தல் நேரமாக இருப்பதால் சிவகார்த்திகேயனின் டாக்டர் பட ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.

டாக்டர்

கோலமாவு கோகிலா படம் புகழ் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள்மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ள டாக்டர் படம் மார்ச் 26ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. டாக்டர் படத்தை பார்க்க சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமின்றி விஜய் ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். டாக்டரை அடுத்து விஜய்யை வைத்து தளபதி 65 படத்தை இயக்கவிருக்கிறார் நெல்சன் திலீப்குமார். அந்த பாசத்தில் தான் அவர் இயக்கிய டாக்டர் படத்தை தியேட்டர்களில் பார்த்து கொண்டாட விஜய் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

ரிலீஸ்

டாக்டர் பட ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கும் நேரத்தில் ஒரு கெட்ட செய்தி வெளியாகியிருக்கிறது. அதாவது டாக்டர் படம் வரும் 26ம் தேதி வெளியாகாதாம். தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடக்கவிருப்பதால் மாநிலமே பரபரப்பாக இருக்கிறது. இந்த நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்தால் மக்கள் தியேட்டருக்கு வருவார்களா என்று தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் நினைக்கிறாராம். அதனால் ரிலீஸை தள்ளிப் போட்டுள்ளார்கள்.

ஏப்ரல்

டாக்டர் படம் மார்ச் 26ம் தேதிக்கு பதில் பின்னர் ஒரு தேதியில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தேர்தல் நேரம் என்றாலும் ரசிகர்களை தியேட்டருக்கு வரவைக்கும் திறமை சிவகார்த்திகேயனிடம் இருக்கிறது. அப்படி இருந்தும் அவர் ரிலீஸை தள்ளிப் போடுகிறார் என்றால் நிறைய யோசித்திருப்பார் போன்று. பணம் போட்டிருக்கிறாரே, யோசிக்கத் தானே வேண்டும்.

டான்

டாக்டர் படத்தில் வரும் செல்லம்மா, நெஞ்சமே ஆகிய பாடல்களை அடுத்து சோ பேபி பாடலின் லிரிக்கல் வீடியோ அண்மையில் வெளியானது. வீடியோவை சொன்ன நேரத்திற்கு வெளியிடாமல் தாமதாக வெளியிட்டனர். அதை பார்த்து ரசிகர்கள் கலாய்ப்பதற்கு முன்பே சிவகார்த்திகேயன், நெல்சன் திலீப்குமார், அனிருத் ஆகியோர் தங்களை தாங்களே கலாய்த்துக் கொண்டனர். சிவகார்த்திகேயன் தற்போது டான் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை புதுமுகம் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here