ஹேப்பி நியூஸ் – இந்த 6 மாவட்டங்களில் நல்ல மழை இருக்கு!

0
7
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு , திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம் (சென்டிமீட்டரில்) :

* வானுர் () 9, முண்டியம்பாக்கம், (விழுப்புரம்) 7,

* திருத்தணி (திருவள்ளூர்) , பாண்டிச்சேரி, சோழவந்தான் () , குடவாசல் (திருவாரூர்), கஞ்சனுர் (விழுப்புரம்) தலா 5 ,

* கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), வலங்கைமான் (திருவாரூர்), சிவகாசி (விருதுநகர்), கும்பகோணம் (தஞ்சாவூர்), நன்னிலம் (திருவாரூர்), கோலியனுர் (விழுப்புரம்), நெமூர் (விழுப்புரம்), அதனபுரம் (விழுப்புரம்) தலா 4,

* காரைக்கால், கமுதி (ராமநாதபுரம்), தரங்கம்பாடி (நாகப்பட்டினம்), பரங்கிப்பேட்டை (கடலூர்), மேலூர் (மதுரை), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை ) தலா 3

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வரை வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு செல்லும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் உயர்அலை முன்னறிவிப்பு : ஏதுமில்லை.

குறிப்பு : குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் உருவாகியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு imdchennai.gov.in இணையதளத்தில் காணவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here