முதுகுவலி அடிக்கடி வருதா? இந்த 10ல ஏதாவது ஒன்று காரணமா இருக்கும்…

0
15

பல நாட்களாக முதுகு வலி பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? இதற்கு பல காரணங்கள் உள்ளன. இது உங்கள் அன்றாட வாழ்க்கை முறையுடன் தொடர்புடையதாகும். வயது முதிர்வு காரணமாகவும் முதுகுவலி ஏற்படலாம். ஆனால் அது மட்டும் காரணமாக இருக்க முடியாது. நமது அன்றாட பழக்கவழக்கங்கள் கூட இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.

ஆனால் ஆய்வின்படி, 80% மக்கள் முதுகு வலியின் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். தொடர்ந்து முதுகு வலி இருக்கும் போது, அது நமது அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கிறது. சில நேரங்களில் முதுகுவலி ஏற்படுவதற்கான காரணம் பற்றி அறிய பெருமுயற்சி எடுக்க வேண்டியிருக்கிறது. தினசரி மேற்கொள்ளும் சில பழக்கவழக்கங்கள் கூட இந்த முதுகு வலி ஏற்பட காரணமாகிறது. நீண்டகால முதுகு வலியை ஏற்படுத்தும் சில பொதுவான பழக்கவழக்கங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

​1. ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து இருப்பது

1-

தற்போது வேலைப்பளு காரணமாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நாம் அமர்ந்திருக்கும் நிலை நமது முதுகெலும்புக்கு அழுத்தத்தைக் கொடுக்கிறது. எனவே நாம் அமர்ந்திருக்கும் முறை மிகவும் முக்கியமானது. முதுகுவலி பிரச்சினை உள்ளவர்கள் அல்லது அதிக நேரம் உட்கார்ந்து பணியில் இருப்பவர்கள் நேராக உட்கார வேண்டும். அதிக நேரம் ஓரிடத்தில் அமராமல் குறிப்பிட்ட இடைவெளியில் சிறிது நேரம் எழுந்து நடந்து பிறகு பணியை தொடரலாம்.

​2. ஹை ஹீல்ஸ்

2-

ஹை ஹீல்ஸ் அணிவது முதுகு வலி ஏற்பட காரணமாகிறது. உடற்பயிற்சி அல்லது நடக்கும்போது அதிக உயரமுள்ள குதிகால் செருப்புகளை அணிவது முதுகு வலி ஏற்பட முக்கியக் காரணம். ஸ்டைலாக இருப்பதற்காக நம்மில் பலர் குதிகால் காலணிகளை அணிகிறோம். இதனால் இது உங்கள் கால் மற்றும் எலும்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

​3. பழைய மெத்தைகள்

3-

20 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் ஒரு மெத்தையில் நீங்கள் தூங்கினால் அது முதுகு வலியை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. நல்ல தூக்கத்தை கொடுக்கும் மெத்தையின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் மட்டுமே. பழைய மெத்தையில் தூங்குவதால் முதுகெலும்பில் அழுத்தம் அதிகரித்து கடுமையான முதுகுவலி ஏற்படுகிறது.

​4. உடற்பயிற்சி

4-

உடலுக்கு இயக்கம் என்பது மிகவும் முக்கியம். உடலுக்கு தேவையான வழக்கமான இயக்கம் இல்லாத போது முதுகு வலி ஏற்படுகிறது. இந்த பிரச்சினையை சரி செய்ய ஒரே வழி உடற்பயிற்சி. உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலின் இயக்கத்தை மேம்படுத்தலாம்.

​5. புகைப்பிடித்தல்

5-

புகைப்பிடிப்பதால் நமது உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவது குறைகிறது. இதனால் புதிய எலும்பு வளர்ச்சி தடைபடுகிறது. மேலும் புகை பிடிப்பதால் அடிக்கடி ஏற்படும் இருமல் முதுகு வலியை ஏற்படுத்தும்.

​6. அதிக எடை

6-

அதிக எடை இருப்பவர்களுக்கு முதுகு வலி உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதிக எடையுடன் இருப்பவர்கள் முதுகுவலியால் பாதிக்கப்படுகின்றனர். இது நமது உடலில் முதுகுத் தசைகள் மற்றும் எலும்புகளுக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறது.

​7. தூக்கமின்மை

7-

சீரான தூக்கமின்மை முதுகு வலியை ஏற்படுத்தக்கூடும். தொடர்ந்து தூங்காமல் இருப்பது, முதுகு வலியை மேலும் மோசமடையச் செய்யலாம்.

​8. அதிக பளு தூக்குதல்

8-

உங்கள் அன்றாட உடற்பயிற்சியின் போது அதிக எடையை தூக்க நேரிட்டால், அதை சரியாக செய்யுங்கள். இல்லையென்றால் திடீரென்று அதிக எடை தூக்கும் போது, அது முதுகு உட்பட உங்கள் உடலின் எந்த பகுதியையும் சேதப்படுத்தும். மேலும் நீண்ட நாட்களுக்கு வலியை ஏற்படுத்தும்.

​9. ஆரோக்கியமற்ற ஊட்டச் சத்து

9-

நமது அன்றாட உணவில் தேவையான அளவு கால்சியம், வைட்டமின் பி மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற ஊட்டச்சத்து கிடைக்காதவர்களுக்கு முதுகுவலி ஏற்படும் அபாயம் அதிகம்.

​10. தவறான பயிற்சிகள்

10-

முறையற்ற தோரணைகள், அதிகப்படியான உடற்பயிற்சி, அவசரமாக உடற்பயிற்சி செய்தல் போன்றவை முதுகு வலியை ஏற்படுத்தும்.

இங்கு குறிப்பிட்டுள்ள மற்றும் முதுகு வலியை ஏற்படுத்தும் இந்த பழக்கவழக்கங்களை தவிர்த்து ஆரோக்கியமுடன் வாழுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here