சாதனை படைத்த ப்ரஷித் கிருஷ்ணா…கவாஸ்கர், மெக்ரா வாழ்த்து!

0
6

இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று புனேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 317/5 ரன்கள் குவித்தது. அடுத்துக் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 42.1 ஓவர்கள் முடிவில் 251/10 ரன்கள் சேர்த்து 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.

சாதனை:

இப்போட்டியின் மூலம் அறிமுகமான பந்துவீச்சாளர் ப்ரஷித் கிருஷ்ணா, மொத்தம் 8.1 ஓவர்கள் வீசி 52 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார். இதன்மூலம், இந்திய அணிக்கு அறிமுக போட்டியில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய வீரராக மாறியுள்ளார்.

இதற்குமுன் ப்யூஷ் சாவ்லா, ஹார்திக் பாண்டியா, வருண் ஆருண் போன்ற மொத்தம் 8 பந்துவீச்சாளர்கள்அறிமுக ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றிருந்தார்கள். ப்ரஷித் கிருஷ்ணா மட்டுமே 4 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

ஐபிஎல்லுக்கு பாராட்டு:

இந்த சாதனை குறித்துப் பாராட்டிப் பேசிய இந்திய அணி முன்னாள் வீரர் , ஐபிஎல் தொடரையும் புகழ்ந்து பேசினார். “ஐபிஎல்லுக்குத்தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். சர்வதேச வீரர்களுடன் இணைந்து விளையாடும் அனுபவத்தை அதுதான் முதலில் கொடுக்கிறது. அங்கு, வீரர்கள் அழுத்தங்களை சமாளிப்பதை இளம் வீரர்கள் நேரடியாகப் பார்த்துக் கற்றுக்கொள்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

“ப்ரஷித் கிருஷ்ணா முதலில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில், உடனே தவறுகளைத் திருத்திக்கொண்டு அடுத்து சிறப்பாகப் பந்துவீசி இங்கிலாந்து அணிக்கு நெருக்கடியை உருவாக்கினார். உண்மையில் இது பாராட்டக் கூடிய விஷயம்தான். பவுன்சர்களை துல்லியமாக வீசினார்” எனத் தெரிவித்தார்.

கிளென் மெக்ரா வாழ்த்து:

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிளென் மெக்ரா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், “இந்திய அணிக்காக அறிமுக ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்களை (4/54) வீழ்த்திய ப்ரஷித் கிருஷ்ணாவுக்கு வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மார்ச் 26ஆம் தேதி துவங்கும். கடைசிப் போட்டி மார்ச் 28ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கத்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here