தமிழகத்தில் அடுத்த ஆட்சி யாருடையது? டைம்ஸ் நவ் – சி வோட்டர் கருத்துக்கணிப்பு!

0
7

ஹைலைட்ஸ்:

  • டைம்ஸ் நவ் – சி வோட்ட்டர் இணைந்து நடத்திய தேர்தல் கருத்துக்கணிப்பு
  • திமுக கூட்டணி 46%, அதிமுக கூட்டணி 34.6% வாக்குகளை பெறும்
  • திமுக கூட்டணி 177 இடங்கள், அதிமுக கூட்டணி 49 இடங்களை கைப்பற்றும்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 234 தொகுதிகள் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் கடந்த 1967ஆம் ஆண்டு முதல் , என இருபெரும் திராவிடக் கட்சிகளே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளில் புதிய அரசியல் கட்சிகளின் வருகையால் தமிழக அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. இருமுனைப் போட்டியாகவே பார்க்கப்பட்டு வந்த தமிழக அரசியலில் 2021 சட்டமன்ற தேர்தல் ஐந்து முனைப் போட்டியை அளித்திருக்கிறது.

அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய ஐந்து கட்சிகளின் முதல்வர் வேட்பாளர்களுடன் வரும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த ஆட்சி அமைக்கப் போவது யார் என்று மார்ச் 17 முதல் 22ஆம் தேதி வரை பல்லாயிரக்கணக்கான பேரிடம் – சி வோட்டர் ஒன்றை நடத்தியது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தமிழகத் தேர்தல் முடிவுகள் (வாக்கு சதவீதம்)

கூட்டணி 2016 தேர்தல் முடிவுகள் 2021 தேர்தல் முடிவுகள் மாற்றம்
திமுக+ 39.4% 46% 6.6%
அதிமுக+ 43.7% 34.6% -9.1%
மக்கள் நீதி மய்யம்+ 0 4.4% 4.4%
அமமுக+ 0 3.6% 3.6%
மற்றவை 16.9% 11.4% -5.5%
மொத்தம் 100 100 0

தமிழகத் தேர்தல் முடிவுகள் (தொகுதிகள்)

கூட்டணி 2016 தேர்தல் முடிவுகள் 2021 தேர்தல் முடிவுகள் மாற்றம்
திமுக+ 98 177 79
அதிமுக+ 136 49 -87
மக்கள் நீதி மய்யம்+ 0 3 3
அமமுக+ 0 3 3
மற்றவை 0 2 2
மொத்தம் 234 234 0

தமிழகத் தேர்தல் முடிவுகள் (வெற்றி வாய்ப்பு)

கூட்டணி குறைந்தபட்சம் டூ அதிகபட்சம்
திமுக+ 173 டூ 181
அதிமுக+ 45 டூ 53
மக்கள் நீதி மய்யம்+ 1 டூ 5
அமமுக+ 1 டூ 5
மற்றவை 0 டூ 4
மொத்தம் 234 234

கூட்டணி இன்று தேர்தல் நடந்தால் நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள்? உங்கள் ஆதரவு எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று நினைக்கிறீர்கள்?
திமுக+ 46.0 47.3
அதிமுக+ 34.6 32.5
மக்கள் நீதி மய்யம்+ 4.4 3.2
அமமுக+ 3.6 5.3
மற்றவை/ சொல்ல இயலாது 11.4 11.7
மொத்தம் 100 100

* அதிமுகவின் வாக்கு வங்கிக்கு டிடிவி தினகரனின் அமமுக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதுகிறீர்களா?

ஆம் இல்லை சொல்ல இயலாது
39% 32.9% 28.1%

* காங்கிரஸ் கட்சிக்கு 25 சீட்கள் மட்டும் ஒதுக்கியது திமுகவிற்கு சாதகமான முடிவுகளை அளிக்குமா?

ஆம் இல்லை சொல்ல இயலாது
45.1% 30.8% 24.1%

* பாஜகவின் இந்துத்துவா அரசியல், ஜெய் ஸ்ரீராம் போன்ற ஸ்லோகங்கள் தமிழகத்தில் எடுபடுமா?

ஆம் இல்லை சொல்ல இயலாது
31.7% 45.5% 22.8%

* பெண்கள் மத்தியில் கமல் ஹாசனுக்கு செல்வாக்கு இருப்பதாக நினைக்கிறீர்களா? இது அவருடைய தேர்தல் வெற்றிக்கு உதவும் என்று கருதுகிறீர்களா?

ஆம் இல்லை பெண்களிடம் செல்வாக்கும் இல்லை, அதனால் அவருக்கு நன்மையும் இல்லை சொல்ல இயலாது
22.8% 44.2% 25.4% 7.6%

* திமுகவின் குடும்ப அரசியல் முடிவுக்கு வருமா?

ஆம் இல்லை சொல்ல இயலாது
41.8% 42.4% 15.8%

* யார் முதல்வராக வருவதற்கு சரியான நபர்?

முதல்வர் வேட்பாளர் சதவீதம்
எடப்பாடி பழனிசாமி (அதிமுக) 29.7%
மு.க.ஸ்டாலின் (திமுக) 43.1%
வி.கே.சசிகலா 8.4%

* தற்போதைய பாஜக தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?

மிகவும் திருப்தி கொஞ்சம் திருப்தி திருப்தி இல்லை தெரியாது/சொல்ல இயலாது
13.45% 27.82% 50.38% 8.35%

* தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கின்றனவா?

மிகவும் திருப்தி கொஞ்சம் திருப்தி திருப்தி இல்லை தெரியாது/சொல்ல இயலாது
18.15% 36.37% 38.8% 6.68%

* முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கக்கூடிய வகையில் இருக்கின்றனவா?

மிகவும் திருப்தி கொஞ்சம் திருப்தி திருப்தி இல்லை தெரியாது/சொல்ல இயலாது
22.14% 33.92% 36.51% 7.43%

* காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கிறதா?

மிகவும் திருப்தி கொஞ்சம் திருப்தி திருப்தி இல்லை தெரியாது/சொல்ல இயலாது
20.58% 28.94% 16.84% 33.64%

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here