முருங்கை இலையை பொடி பண்ணி ஏன் வீட்ல கட்டாயம் வெச்சிருக்கணும் தெரியுமா? இதுதான் காரணம்

0
2
samayam tamil

முருங்கை மரத்தின் இலைகள், பூ, காய்கள் என எல்லாமே நமக்கு நன்மை தரக் கூடியது. இதன் நன்மைகளை உணர்ந்த நம் முன்னோர்கள் அந்தக்காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை இதை சமையலில் பயன்படுத்தி வருகிறார்கள். முருங்கைக் கீரை பொறியல், சாம்பார் என எல்லாவற்றிலும் இது சுவையை அளிப்பதோடு நம் ஆரோக்கியத்தை பேணவும் உதவி செய்கிறது. முருங்கைக்கீரையை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியமே இருக்காது என்கிறார்கள் ஆயுர் மருத்துவர்கள்.

மனிதர்களின் உடலுக்கு தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 அமினோ அமிலங்கள் முருங்கைக் கீரையில் உள்ளது. மற்ற உணவுகளைக் காட்டிலும் முருங்கையில் மட்டும் 25 மடங்கு இரும்புச் சத்து காணப்படுகிறது. எனவே இது இரத்தத்தில் உள்ள ஹூமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

இப்படி ஏராளமான நன்மைகள் தரும் முருங்கை இலைகளை எப்படி பயன்படுத்தி பலன் பெறலாம் வாங்க தெரிஞ்சுப்போம்.

​முருங்கை சக்தி வாய்ந்த தாவரம்

samayam tamil

மோரிங்கா ஓலிஃபெரா என்பது இந்தியாவின் வடக்கு பகுதியில் விரிவாக வளரும் ஒரு தாவரமாகும். முருங்கை பவுடர் அல்லது பொடி என்பது முருங்கை மரத்தின் இலைகளை உலர வைத்து தயாரிக்கப்படுகிறது. இந்த பொடியை கொண்டு நாம் எண்ணற்ற நன்மைகளை பெற முடியும்.

​முருங்கையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

samayam tamil

முருங்கை இலையில் விட்டமின் ஏ, சி, தயமின் பி1, ரிபோஃப்ளேவின், நியசின், போலேட், மக்னீசியம், இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் ஜிங்க் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன.

​மாதவிடாய் பிடிப்பை போக்கும் அற்புத பொடி

samayam tamil

10 கிராம் முருங்கைப் பொடியில் ஒரு நாளைக்கு தேவையான 32% இரும்புச் சத்து தேவை பூர்த்தி ஆகிறது. முருங்கைக்காய் பொடி நம்முடைய இரத்த ஹூமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. எனவே மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிடிப்பு மற்றும் இரத்த இழப்பை ஈடுகட்ட உதவுகிறது. மேலும் உங்களை சுறுசுறுப்பாகவும் ஆற்றலுடனும் செயல்பட உதவி செய்யும்.

​சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

samayam tamil

அமெரிக்காவை தளமாகக் கொண்ட வேளாண் ஆராய்ச்சி சேவையின்படி, முருங்கைப் பொடி விட்டமின் ஏ மற்றும் விட்டமின் ஈ ஆகியவற்றின் வளமான ஆதாரமாகும். இவை உங்க சருமத்தை ஆரோக்கியமாகவும் மினுமினுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. வயதான காலத்தில் ஏற்படும் கோடுகள், சரும சுருக்கங்கள் ஆகியவற்றை போக்குகிறது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன் முகப்பருவை நீக்க பயன்படுகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன.

​மன அழுத்தத்தை போக்கும்

samayam tamil

இந்த முருங்கையில் அடாப்டோஜென்கள் என்ற பொருள் காணப்படுகிறது. இது நம்மை மன அழுத்தத்தில் இருந்து காக்கிறது என மருந்தியல் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே முருங்கை இலை பொடியை சாப்பிட்டு வந்தால் உங்க மன அழுத்தம் குறைந்து ரிலாக்ஸ் பெறுவீர்கள்.

​நீரிழிவை கட்டுப்படுத்த

samayam tamil

முருங்கை பொடியில் உள்ள கால்சியம் உங்களுக்கு அதிக செரிமானத்தை கொடுக்கிறது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன. ஆரோக்கியமான குடல் செயல்பாட்டிற்கு உதவி செய்கிறது.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் குளோரோஜெனிக் அமிலம் உள்ளது

நீரிழிவு பராமரிப்பு இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, முருங்கை இலைப்பொடியில் உள்ள குளோரோஜெனிக் அமிலம் திடீரென இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை கட்டுப்படுத்துகிறது.

​இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த

samayam tamil

முருங்கை இலைப் பொடியில் கொழுப்பை கரைக்கும் சக்தி காணப்படுகிறது. இதனால் இது இதய ஆரோக்கியம் மேம்பட உதவும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த இது உதவி செய்கிறது.

​விதைப்பை ஆரோக்கியம்

samayam tamil

ஆண்களின் புரோஸ்டேட் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

முருங்கை விதைகள் மற்றும் இலைகளில் குளுக்கோசினோலேட்டுகள் என்ற சல்பர் பொருள் உள்ளது. இது ஆன்டி கேன்சர் தன்மை கொண்டு இருப்பதால் புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

​கல்லீரல்

samayam tamil

கல்லீரல் ஆரோக்கியத்தை காக்கிறது. முருங்கை இலையில் அதிக சத்துள்ள பாலிபினால்கள் காணப்படுகின்றன. இது கல்லீரல் செல்கள் அழிவதை தடுக்கிறது. கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரல் சீராக இயங்குவதற்கு உதவி செய்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here