சசிகலா உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவமனை நிர்வாகம் சொல்வது இதுதான்!

0
8
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும் அதிமுகவின் முன்னாள் இடைக்கால பொதுச் செயலாளருமான சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் சிறைதண்டனை அனுபவித்து வரும் சசிகலா ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாவார் எனக் கூறப்பட்ட நிலையில் அவருக்கு நேற்று கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது.

பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் தீவிர நுரையீரல் தொற்று இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டா. இந்நிலையில் விக்டோரியோ மருத்துவமனை இன்று வெளியிட்ட அறிக்கையில், “சசிகலாவின் உடல்நிலை சீராக இருக்கிறது. வெண்டிலேட்டர் போன்ற எந்தவித செயற்கை சுவாசக் கருவிகளும் பொருத்தப்படவில்லை.

sasikala health report

அவருக்கு தீவிர நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளது. CT மதிப்பு 16/25ஆக இருக்கிறது. அவருக்கு டைப்-2 சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், தைராய்டு ஆகியவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்ஸ் ரேட் 62 பிபிஎம், ரத்த அழுத்தம் 100/68 இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here