சூரரைப் போற்று பார்த்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கத் துடிக்கும் விஜய்

0
9
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்த படம் கடந்த 12ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. படத்தை பார்த்து அசந்துவிட்டதாக பலரும் தெரிவித்தார்கள். ஏதாவது ஒரு காட்சியை பார்த்து புல்லரித்தால் பரவாயில்லை படம் முழுக்க புல்லரிக்க வைத்தால் எப்படி சுதா கொங்கரா என்று சினிமா ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

பல காலம் கழித்து சூர்யாவை இப்படி பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. தன்னுடைய முந்தைய படங்களின் சாயலே இல்லாமல் நடித்திருக்கிறார் என்று விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் சூரரைப் போற்று படத்தை பார்த்த ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சூரரைப் போற்று படத்தை நண்பர்களுடன் சேர்ந்து பார்த்தேன். அனைவரும் ஆண்கள் தான். அதில் மூன்று பேர் அழுதுவிட்டார்கள். சூர்யாணா என்ன ஒரு அருமையான நடிகர். ஒரு நடிகர் தன் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியதை பார்த்து அன்பை தான் கொடுக்க முடியும். அபர்ணா பாலமுரளி- தன் படங்களில் நடிக்க சுதா கொங்கரா எங்கிருந்து இது போன்ற அருமையான பெண்களை தேடிக் கண்டுபிடிக்கிறார் என்று வியக்கிறேன்.

vijay deverakonda

சுதா கொங்கரா- நான் விரைவில் உங்கள் படத்தில் நடிப்பேன். ஜி.வி. பிரகாஷின் இசை டாப் கிளாஸ். சிறந்த ஒளிப்பதிவு. துணை நடிகர்களும் சிறப்பாக நடித்திருந்தார்கள்.

எவ்வளவு உண்மை, எவ்வளவு கதை என்பது தெரியவில்லை. அதனால் Simplyfly புத்தகத்தை வாங்கி கேப்டனின் பயணம் பற்றி படிக்கப் போகிறேன். படத்தை கண்டிப்பாக பார்க்கவும் என்றார்.
விஜய் தேவரகொண்டாவின் ட்வீட்டை பார்த்த சூர்யா ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். சூரரைப் போற்று படத்தை பார்த்து தானும் எமோஷனலானதாக கேப்டன் கோபிநாத் ட்வீட் செய்திருந்தார். சுரரைப் போற்று படம் ஏர் டெக்கன் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சூரரைப் போற்று படத்தை பார்த்து என்ஜாய் பண்ணாதது நான் மட்டும் தானா என்று கேட்டு பிக் பாஸ் பிரபலம் வைஷ்ணவி ட்வீட் செய்தார். அவரின் ட்வீட்டை பார்த்த சிலர், தாங்களுக்கு போர் அடித்ததாக கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here