மாஸ்டர் ஹீரோயினின் கொடூர ஆசை: என்னம்மா இப்படி இருக்கீங்களேமா?

0
1

ஹைலைட்ஸ்:

  • மாளவிகா மோகனனின் கனவு கதாபாத்திரம்
  • மாஸ்டரில் எனக்கு ஆக்ஷன் இல்லை- மாளவிகா

ரஜினியின் பேட்ட படம் மூலம் கோலிவுட் வந்த மாளவிகா மோகனனுக்கு இரண்டாவது படத்திலேயே விஜய்க்கு ஜோடியாகும் வாய்ப்பு கிடைத்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படத்தில் மாளவிகா தான் ஹீரோயின்.

மாஸ்டர் படம் நாளை மறுநாள் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தை விளம்பரம் செய்து வரும் வேலையில் பிசியாக உள்ளார் மாளவிகா. ரசிகர்களை போன்றே மாஸ்டர் படத்தை மாளவிகாவும் பெரிதும் எதிர்பார்க்கிறார். படத்தில் அவர் கல்லூரி பேராசிரியையாக நடித்திருக்கிறார்.

மாஸ்டர் பட விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாளவிகா தன் கெரியர் பற்றி கூறியதாவது,

சும்மா பார்க்க அழகாக இருந்தால் மட்டும் போதாது. ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான படங்களை புது நடிகைகள் தேர்வு செய்ய வேண்டும். கில் பில் படத்தில் உமா தர்மன் நடித்த கதாபாத்திரம் தான் எனக்கு எப்பொழுதுமே பிடித்தது. அது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் மாஸ்டர் படத்தில் எனக்கு ஆக்ஷன் காட்சிகள் எதுவும் இல்லை என்றார்.

ஆக்ஷன் படம் ஒன்றில் நடிக்க மாளவிகாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். மாளவிகா தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த வாரம் தான் பூஜையுடன் படப்பிடிப்பை துவங்கினார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

டி43 படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அசுரனை அடுத்து மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைப்பதில் மகிழ்ச்சி என்று ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தற்போது சினிமா ரசிகர்களின் கவனம் எல்லாம் மாஸ்டர் மீது தான் உள்ளது. மாநகரம், கைதியை அடுத்து லோகேஷ் இயக்கியுள்ள மாஸ்டரில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். படத்தில் விஜய்க்காக பன்ச் வசனம் எல்லாம் வைக்கவில்லை என்று லோகேஷ் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் படம் வெற்றி பெற வேண்டி லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் திருவண்ணாமலைக்கு சென்று அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பிரார்த்தனை செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here