இந்த குளிர்ல எப்பவும் சோம்பலாவே இருக்கா… இந்த 6 விஷயத்த பண்ணுங்க… உடம்பும் மனசும் கதகதப்பா இருக்கும்…

0
2

குளிர்காலம் நம் மன ஆரோக்கியத்தை அதிகளவு பாதிக்கக் கூடிய விஷயங்களுள் ஒன்று. குளிர்காலத்தில் உடம்பு அசதியாகவும் சோர்வாகவும் இருக்கும். எப்பொழுதும் போர்வைக்குள் முடங்கி தூங்க வேண்டும் என்றே தோன்றும். குளிர்காலம் ஒரு பக்கம் கொரோனோ பயம் ஒரு பக்கம் என நம் மனநிலை பல வழிகளில் பாதித்து வருகிறது. எனவே மக்கள் தங்கள் மனநிலையில் மாற்றம் பெறுவது அவசியம். இந்த குளிர்காலத்தில் உங்க நேரத்தை எப்படி செலவிடுவது என்று நீங்கள் யோசித்து கொண்டு இருக்கலாம். எனவே உங்க மனநிலையையும் அதே நேரத்தில் உங்க நேரத்தையும் சிறப்பாக செயல்படுத்த நாங்கள் சில யோனைகளை உங்களுக்கு வழங்குகிறோம். இந்த யோசனைகள் குளிர்காலத்தில் உங்களை உற்சாகமாக வைக்க உதவி செய்யும்.

​பிடித்த புத்தகத்தை படியுங்கள்

உங்களுக்கு படிக்கும் பழக்கம் இல்லாவிட்டால் கூட புத்தகங்களை படிப்பது உங்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லும். புத்தகங்கள் உங்களை ஒரு கற்பனை உலகிற்கு அழைத்துச் செல்லும். அதில் உள்ள புதிய புதிய சொற்கள் மற்றும் எழுத்துக்களை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கு பிடித்த நபர்களுடன் இணைந்து கூட ஒரு புத்தகத்தை நீங்கள் வாசித்து வரலாம்.

சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வில், பங்கேற்பாளர்கள் ஆறு நிமிட வாசிப்புக்குப் பிறகு அவர்களின் மன அழுத்த அளவுகளில் 68 சதவீதம் குறைப்பு இருப்பதைக் கண்டறிந்தனர்.

​சமையலுக்கு அதிக நேரம் செலவழியுங்கள்

இந்த லாக்டவுன் சமயத்தில் உங்களுக்கு அதிக நேரம் கிடைக்கும். அந்த சமயங்களில் நீங்கள் அதை சமையலுக்காக பயன்படுத்தலாம். சமைக்கும் செயல்முறை உங்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கும். ஜர்னல் ஆஃப் பாசிட்டிவ் சைக்காலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், சமையல் போன்ற ஆக்கபூர்வமான செயல்களில் நேரத்தை செலவிடுபவர்கள் மற்றவர்களை விட மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது. எனவே இந்த லாக்டவுன் சமயத்தில் வெளியே செல்லாமல் வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டு வரலாம்.

​அதிக இயற்கை ஒளியை பெறுங்கள்

குளிர்காலம் ஆனது பகல் பொழுதை குறைத்து வருகிறது. இதனால் நம் உடலுக்கு போதுமான சூரிய ஒளி கிடைப்பதில்லை. அதுமட்டுமல்லாமல் கொரோனோ காரணமாக நாம் வெளியே செல்வதுமில்லை. சுற்றுச்சூழல் சுகாதார இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், குறைந்த அளவிலான சூரிய ஒளி மற்றும் பலவீனமான அறிவாற்றல் நிலை ஆகியவற்றுக்கு இடையே ஒரு தொடர்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

எனவே சூரிய ஒளியில் இருப்பது உண்மையில் உங்க உணர்ச்சி ஆரோக்கியத்தை அதிகரிக்கும். பிற்பகல் சமயங்களில் வெளியே நடைபயிற்சியை நீங்கள் மேற்கொள்ளலாம். உங்க அறையில் கண்ணாடிகளை வைத்து இயற்கையான சூரிய ஒளியை உள்ளே பெறலாம்.

​உங்க இடத்தை வசதியாக்கி கொள்ளுங்கள்

உங்க இடத்தை சூடானதாகவும் வசதியானதாகவும் மாற்றுவது உங்க மனதுக்கும் உடலுக்கும் மகிழ்ச்சியை தரும். உட்புற தாவரங்கள் உட்புற காற்றை சுத்திகரிப்பது மட்டுமல்லாமல் உங்க மனநிலையை அதிகரிக்கும். உடலியல் மானுடவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, தாவரங்கள் உளவியல் மற்றும் உடலியல் அழுத்தங்களைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.

உங்க மனநிலையை மேலும் மெருகேற்ற வீட்டில் வாசனை திரவிய மெழுகுவர்த்தியை ஏற்றலாம். நறுமணம் உங்க மனதில் நிதானமான விளைவை ஏற்படுத்தும். உளவியல் அறிவியல் சங்கத்தின் ஆராய்ச்சியின் படி பூக்களின் வாசனை மகிழ்ச்சியான உணர்வை அதிகரிக்கிறது என்று ஆய்வு கூறுகிறது.

​சுறுசுறுப்பாக இருங்கள்

குளிர்காலம் உங்களை சோம்பேறித்தனமாக ஆக்குகிறது. எனவே உங்க உடலை நகர்த்தும் செயல்களில் நீங்கள் ஈடுபடலாம். நீங்கள் நடனம், ஓட்டம் அல்லது நடைபயணம் போன்ற நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபடலாம். .இந்த விதமான உடற்செயல்பாடுகள் மனநிலையை மேம்படுத்தும் எண்டோர்பின்கள் அல்லது மகிழ்ச்சியான ஹார்மோன்களின் வெளியீட்டிற்கு வழிவகுக்கிறது.

​செல்லப் பிராணிகளை வளர்த்தல்

செல்லப் பிராணிகளை வளர்ப்பது உங்க உணர்ச்சி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. ஏஜிங் & மென்டல் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், செல்லப்பிராணிகளை வைத்திருப்பது ஒருவருக்கு தனிமையை குறைக்க உணரக்கூடும் என்று கூறுகிறது. எனவே வீட்டில் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்த்து வாருங்கள். அதனுடன் நட்பு கொள்ளுங்கள், அதனுடன் பேசுங்கள், கவலையை விரட்ட முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here