பிளாக் ஷார்க் 4, 4 ப்ரோ அறிமுகம்: எதிர்பார்த்ததை விட கம்மி விலை!

  0
  9

  ஹைலைட்ஸ்:

  • சியோமி கேமிங் ஸ்மார்ட்போனான பிளாக் ஷார்க் 4 சீரிஸ் அறிமுகம்
  • பிளாக் ஷார்க் 4 மற்றும் 4 ப்ரோ என்கிற இரண்டு மாடல்கள் வெளியாகியுள்ளன

  சியோமி நிறுவனத்தின் துணை பிராண்டின் லேட்டஸ்ட் கேமிங் ஸ்மார்ட்போன்களாக பிளாக் ஷார்க் 4 மற்றும் பிளாக் ஷார்க் 4 ப்ரோ சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த நான்காவது தலைமுறை கேமிங் ஸ்மார்ட்போன்கள் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல உயர் தர அம்சங்களை தொகுக்கின்றன.

  புதிய பிளாக் ஷார்க் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் இன்-இயர் கேமிங் ஹெட்செட் மற்றும் கூலிங் பேக் கிளிப் 2 ப்ரோ போன்ற கேமிங் ஆக்சஸெரீஸ்களையும் நிறுவனம் அறிவித்துள்ளது.

  பிளாக் ஷார்க் 4, பிளாக் ஷார்க் 4 ப்ரோ விலை விவரங்கள்:

  முதலில் வெண்ணிலா மாறுபாட்டைப் பற்றி பேசுகையில், பிளாக் ஷார்க் 4 ஆனது நான்கு ஸ்டோரேஜ் உள்ளமைவுகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  6 ஜிபி ரேம் / 128 ஜிபி – சுமார் ரூ.27,700
  8 ஜிபி ரேம் / 128 ஜிபி – சுமார் ரூ.30,000
  12 ஜிபி ரேம் / 128 ஜிபி – சுமார் ரூ.33,300
  12 ஜிபி ரேம் / 256 ஜிபி – சுமார் ரூ.36,600

  மறுகையில் உள்ள பிளாக் ஷார்க் 4 ப்ரோ ஸ்மார்ட்போனை பொறுத்தவரை…

  8 ஜிபி ரேம் / 256 ஜிபி – சுமார் ரூ.44,400
  12 ஜிபி ரேம் / 256 ஜிபி – சுமார் ரூ. 55,700
  16 ஜிபி ரேம் / 512 ஜிபி – சுமார் ரூ.58,800

  இந்த இரண்டு மாடல்களும் பிளாக் ஷார்க்கின் அதிகாரப்பூர்வ இ-ஸ்டோரில் ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கின்றன. அவைகள் மார்ச் 25 முதல் விற்பனைக்கு வரும்.

  பிளாக் ஷார்க் 4 ப்ரோ அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:

  – 6.67 இன்ச் புல் எச்டி + சாம்சங் இ 4 டிஸ்ப்ளே
  – 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
  – 720 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் விகிதம்
  – செல்பி கேமராவுக்கு இடமளிப்பதற்காக டிஸ்பிளே மையத்தில் சிறிய கட்-அவுட்
  – குறைந்த-பெசல்லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பு
  – குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 மொபைல் பிளாட்பாரம்
  – 16 ஜிபி வரை எல்பிடிடிஆர் 5 ரேம்
  – 512 ஜிபி வரை யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ்
  – மேம்பட்ட செயல்திறனுக்காக ஸ்மார்ட்போனில் ஒரு எஸ்.எஸ்.டி
  – அதிர்ஷ்டவசமாக 3.5 மிமீ ஆடியோ ஜாக்
  – டூயல் ஸ்பீக்கர்ஸ்
  – 4,500 எம்ஏஎச் பேட்டரி
  – 120W ஃபாஸ்ட் சார்ஜ் தொழில்நுட்பம்
  – எடை 220 கிராம்
  – அளவீட்டில் 163.83 × 76.35 × 9.9 மிமீ
  -அக்ஸலரோமீட்டர், எலெக்ட்ரானிக் காம்பஸ், கைரோஸ்கோப், ப்ராக்ஸிமிட்டி சென்சார் மற்றும் ஆம்பியண்ட் லைட் சென்சார்

  பிளாக் ஷார்க் 4 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:

  – பிளாக் ஷார்க் 4 ப்ரோ வேரியண்ட்டைப் போன்ற டிஸ்பிளே அளவு மற்றும் பேட்டரி திறன்
  – குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 SoC
  – 12 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம்
  – 256 ஜிபி வரை யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ்
  – அளவீட்டில் 163.83 × 76.35 × 9.9 மிமீ
  – 210 கிராம் எடை

  – இரண்டு ஸ்மார்ட்போன்களும் மோட்டார் பொருத்தப்பட்பிஸிக்கல் ட்ரிகர்களைக் கொண்டுள்ளன, அவைகளை செயல்படுத்தப்படும்போது பாப்-அப் ஆகின்றன
  – இரண்டுமே 5 ஜி-ரெடி மற்றும் பிரத்யேக ‘ஷார்க் ஸ்பேஸ்’ கேமிங் மோட்-ஐ பெறுகின்றன.

  – இரண்டிலும் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு

  – பிளாக் ஷார்க் 4 ப்ரோவில் 64 மெகாபிக்சல் ட்ரிபிள் (8 எம்பி + 5 எம்பி) பின்புற கேமரா அமைப்பு, செல்பீக்களுக்காக 20 மெகாபிக்சல் முன்அக்கா கேமரா
  – பிளாக் ஷார்க் 4 மாடலில் 48 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு கிடைக்கிறது.

  – இரண்டுமே Android 11 OS அடிப்படையில் JoyUI 12.5 மூலம் இயங்கும்.

  முன்னர் குறிப்பிட்டபடி, சியோமி ஒரு சில கேமிங் பாகங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது- அவற்றில் பிளாக் ஷார்க் கூலிங் பேக் கிளிப் 2 ப்ரோ, பிளாக் ஷார்க் 3.5 மிமீ இன்-இயர் கேமிங் இயர்போன்ஸ் சுமார் ரூ.1,600 என்கிற ஆரம்ப விலைக்கு வாங்க கிடைக்கும்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here