Mi Sale : டிச.22 வரை ரெட்மி போன்கள், மி நோட்புக் 14 உப்டட பல தயாரிப்புகள் மீது ஆபர் மழை!

    0
    4

    சியோமி நிறுவனமானது நம்பர் 1 மி ஃபேன் என்கிற சிறப்பு விற்பனையை வருகிற டிசம்பர் 22 வரை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விற்பனையின் போது ஸ்மார்ட்போன்கள், மி டிவிகள், லேப்டாப்கள் மற்றும் மி பேண்ட் 4 மற்றும் பிற ஆக்சஸெரீஸ்கள் உள்ளிட்ட பல்வேறு சியோமி தயாரிப்புகளின் மீது தள்ளுபடி மற்றும் சலுகைகள் அணுக கிடைக்கும்.

    பயனர்கள் ஸ்மார்ட்போன்களின் மீது ரூ.8,000 வரையிலான தள்ளுபடி, மி டிவிகளில் ரூ.4,000 வரை தள்ளுபடி, லேப்டாப்களில் ரூ.9,000 வரை தள்ளுபடி மற்றும் Mi ecosystem-இல் ரூ.6,000 வரை தள்ளுபடியை பெறலாம்.

    சியோமியின் நம்பர் 1 மி ஃபேன் விற்பனை இன்று, அதாவது டிசம்பர் 18 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22 வரை தொடரும். இந்த விற்பனையின் கீழ் அணுக கிடைக்கும் சிறந்த சலுகைகள் மற்றும் ஒப்பந்தங்களின் முழு லிஸ்ட் இதோ:

    ரெட்மி நோட் 9 தொடர் ஸ்மார்ட்போன்கள் மீதான தள்ளுபடிகள்:

    ரெட்மி நோட் 9 சீரிஸ் மீது ரூ.4,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் ரூ.14,999 க்கு பதிலாக ரூ.11,999 க்கும், ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.16,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கும் வாங்க கிடைக்கிறது. ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஆனது ரூ.16,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

    ரெட்மி 9 தொடர் ஸ்மார்ட்போன்களின் மீதான தள்ளுபடிகள்:

    ரெட்மி 9 சீரிஸ் மீது ரூ.3000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. மிகவும் மலிவான ரெட்மி 9ஏ மாட; ரூ.6,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. ரெட்மி 9ஐ, ரெட்மி 9, மற்றும் ரெட்மி 9 ப்ரைம் ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.8,299, ரூ.8,999 மற்றும் ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது.

    மி நோட்புக் 14 தொடர் லேப்டாப்களின் மீதான தள்ளுபடிகள்:

    இந்த சிறப்பு விற்பனையின் போது, மி நோட்புக் 14 சீரிஸுக்கும் தள்ளுபடி கிடைக்கிறது, இப்போது மி நோட்புக் 14 256 ஜி / யுஎச்.டி வேரியண்ட் ஆனது ரூ.41,999 முதல் வாங்க கிடைக்கிறது. இதன் 512 ஜி மாடலை ரூ.43,999 க்கும், 512 ஜி / எம்எக்ஸ் 250 மாடலை ரூ.47,999 க்கும் ஒருவர் வாங்கலாம். மி நோட்புக் ஹொரைசன் 14 லேப்டாப்பின் விலை ரூ.50,999 முதல் தொடங்குகிறது.

    மி ஆக்சஸெரீஸ்கள் மீதான தள்ளுபடிகள்:

    மி பேண்ட் 4, மி 10,000 எம்ஏஎச் மி பவர் பேங்க் மற்றும் மி டூயல் டிரைவர் இன்-இயர் இயர்போன்ஸ் மீதும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மி பேண்ட் 4 ஆனது ரூ.2,499 க்கு பதிலாக ரூ.1,999 க்கும், மி 10,000 எம்ஏஎச் பவர் பேங்க் ஆனது இந்த விற்பனையின் போது ரூ.1,999 க்கும் வாங்க கிடைக்கும்.

    மி டூயல் டிரைவர் இன்-காது இயர்போன்ஸ் ஆனது ரூ.999 க்கு பதிலாக ரூ.599 க்கு வாங்கலாம். மேலும் இந்த விற்பனையில் மி பியர்ட் டிரிம்மர் ஆனது ரூ.1,499 க்கு பதிலாக ரூ.1,299 க்கும், மி பியர்ட் டிரிம்மர் 1 சி ஆனது ரூ.8,99 க்கும் வாங்க கிடைக்கும்.

    சியோமி நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்சான மி வாட்ச் ரிவால்வ், அதன் அசல் விலையான ரூ.15,999-இல் இருந்து ரூ.6,000 என்கிற தள்ளுபடியை பெற்று ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது.

    மி வாட்ச் ரிவால்வ் ஆனது 1.3 இன்ச் அளவிலான AMOLED ஸ்க்ரீனை கொண்டுள்ளது.மேலும் இந்த வாட்ச்சால் 10 தொழில்முறை விளையாட்டு மோட்களுடன் உங்களின் விளையாட்டு நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடியும். கூடுதலாக, இந்த மி வாட்ச் FIRSTBEAT தொழில்முறை விளையாட்டு பகுப்பாய்வையும் கொண்டுள்ளது மற்றும் ஜி.பி.எஸ் உடன் வருகிறது.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here