கார்டியாக் அரஸ்ட் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்ன முதலுதவி செய்ய வேண்டும்

0
10

கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டு முதல் 6 நிமிடத்திற்குள் சிகிச்சை அளிக்காவிட்டால் மரணம் ஏற்பட வாய்ப்பு அதிகம். மனிதரின் இதயம் நொடிக்கு 60 -100 என்ற கணக்கில் துடிக்கிறது. இந்தத் துடிப்பில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவதை அரித்மியா என்று குறிப்பிடுகிறோம். திடீரென இதயத்துடிப்பு அதிகரிப்பதை அல்லது மரபணு ரீதியாக இதய நோய்களால் பாதிக்கப் படுவதை அரித்மியா என்கிறோம்.

​கார்டியாக் அரஸ்ட் ஏற்படுவதற்கான அறிகுறிகள்

  • பலவீனம்
  • படபடப்பு
  • நாடித்துடிப்பின்மை
  • சுவாசமின்மை
  • உணர்வு இழப்பு
  • மூச்சு திணறல்

​முதலுதவி

திடீரென ஒருவருக்கு கார்டியாக் அரஸ்ட் ஏற்படும்போது உடனடியாக நாம் செய்ய வேண்டியவை பற்றி தெரிந்து கொள்வோம். கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்ட முதல் ஆறு நிமிடங்கள் மிகவும் முக்கியமானது. கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்ட முதல் ஆறு நிமிடங்களுக்குள் கார்டியோபுல்மனரி புத்துயிர் சிகிச்சை கொடுக்கப்பட்டால், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உள்ளன. இந்த முதலுதவி செய்யப்படாவிட்டால் நோயாளி உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இதற்கு பாதிக்கப்பட்ட நபரின் மார்பில் கைகளை வைத்து அழுத்த வேண்டும். இது இதயம் மூளைக்கு ரத்தத்தை செலுத்துவதை தூண்டுகிறது. அடுத்து உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டால் உயிரை காப்பாற்றலாம்.

​கார்டியாக் அரஸ்ட்க்கும், மாரடைப்புக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

மாரடைப்பு மற்றும் திடீரென இதயத்துடிப்பு நிற்பது போன்றதாகும். இது இருதய நோயாளிகளுக்கு ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சினையாகும். இந்த இரு நோய்களையும் பெரும்பாலும் வேறுபடுத்த முடியாது. இதயத்திற்கு ஆக்சிஜனை வழங்கும் ரத்த நாளங்கள் தடுக்கப்படும் போது மாரடைப்பு நிகழ்கிறது. ஒழுங்கற்ற இதயத் துடிப்புகள் ஏற்படும் போது அது திடீர் மரணத்திற்கு வழிவகுக்கிறது.

கார்டியாக் அரஸ்ட் என்பது ஒரு இருதய பிரச்சனையாகும். 95 சதவீதத்துக்கும் அதிகமான நோயாளிகள் இந்த கார்டியாக் அரஸ்ட்ல் இருந்து தப்புவது இல்லை. இதய நோயாளிகள் இதயம் சார்ந்த நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். மேலும் கார்டியாக் அரஸ்ட் ஏற்படும் அபாயம் உள்ளதா என்று தெரிந்துகொண்டு அதற்கு சிகிச்சை பெறவேண்டும்.

​சிகிச்சைகள்

ஐ.சி.டி கள் (பொருத்தக்கூடிய கார்டியோவர்டர்-டிஃபிப்ரிலேட்டர்): இது ஒரு சிறிய இயந்திரமாகும். இந்த சாதனம் இதய துடிப்பை தொடர்ந்து கண்காணிக்கவும், ஏதேனும் பிரச்சனை உள்ளதா என கண்டறியவும் உதவுகிறது. சாதாரண துடிப்பை மீட்டெடுக்க இதய தசைக்கு சக்திவாய்ந்த அதிர்ச்சியை கொடுக்கிறது. கார்டியாக் அரஸ்ட் அபாயத்தில் உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களின் இதய துடிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டிய நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அறுவை சிகிச்சைகள்: கரோனரி இதய நோய் உள்ள நோயாளிகளுக்கு இந்த அறுவை சிகிச்சை முறை சிறப்பாக செயல்படுகிறது. இது ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது இதய தசையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கான பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகளை கொண்டது. கார்டியோமயோபதி அல்லது பிறவி இதய நோய் உள்ள நோயாளிகளுக்கு, இந்த முறை அறுவை சிகிச்சைகள் உதவுகிறது.

வழக்கமான சோதனைகளைப் செய்து கொள்வதன் மூலமும், இதய நோய் சார்ந்த பரிசோதனைகளை செய்து கொள்வதன் மூலமும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வதன் மூலமும் கார்டியாக் அரஸ்ட் பிரச்சனையில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here